சிக்கன் மிளகு கறி
தேவையான பொருள்கள்::

 • சிக்கன் - அரைக் கிலோ
 • பெரிய வெங்காயம் - 2
 • தக்காளி - 2
 • பூண்டு - 5 பல்
 • இஞ்சி - சிறிய துண்டு
 • மிளகுத்தூள் - ஒரு ஸ்பூன்
 • மல்லித்தூள் - 2  ஸ்பூன்
 • மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்
 • பட்டை - 1
 • கிராம்பு - 2
 • கறிவேப்பிலை - சிறிது
 • எண்ணெய் - தேவையான அளவு
 • உப்பு - தேவையான அளவு

செய்முறை::

 • பெரிய வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டு, இஞ்சியை விழுதாய் அரைத்துக்  கொள்ளவும்.
 • கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த பின்பு பட்டை, கிராம்பு தாளித்து நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும்.
 • வெங்காயம் வதங்கியபின் இஞ்சி, பூண்டு விழுதினைப் போட்டு வதக்கி, பிறகு தக்காளியைப் போட்டு நன்றாக வதக்கி  கழுவிய சிக்கனைப் போட்டு, மஞ்சள்தூள், மிளகுத்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். சிறிது கறிவேப்பிலையையும்  உடன் சேர்த்துக் கொள்ளவும்.
 • கறி நன்கு வதங்கியபின்  1  டம்ளர் தண்ணீர் விட்டு மூடிவிடவும்.
 • நன்றாக கொதித்து குழம்பான பிறகு, மூடியைத் திறந்து நன்றாக கிளறி  குழம்பு நன்கு கெட்டியானவுடன்  இறக்கவும்.