நாட்டுகோழி ரசம்
தேவையான பொருட்கள்::

  • நாட்டு கோழி  - அரை கிலோ
  • சின்ன வெங்காயம் – 15
  • சீரகம்  – 1  ஸ்பூன்
  • மிளகு  – 2   ஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 1
  • தக்காளி – 2
  • இஞ்சிபூண்டு –  பேஸ்ட்  -2   ஸ்பூன்
  • பட்டை, லவங்கம் – தலா 1
  • மிளகாய்த்தூள் – 1   ஸ்பூன்
  • தனியாத்தூள் – 1   ஸ்பூன்
  • மஞ்சள்தூள் –   அரை  ஸ்பூன்
  • கருவேப்பிலை  , மல்லி இலை - தேவையான அளவு
  • உப்பு, எண்ணெய் – தேவையான அளவு


செய்முறை::

  • மிளகு , சீரகம்  இரண்டையும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
  • குக்கரில்  எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் சேர்த்து தாளித்து, இரண்டாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  •  பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு  மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.
  • அதனுடன் பொடித்த  மிளகு , சீரகம், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, கோழிக்கறி   சேர்த்து நன்கு கலக்கி,  தேவையான அளவு தண்ணீர்  ஊற்றி   4  விசில் வரும் வரை வேக விடவும்.