தேவையான பொருட்கள்::
- நாட்டு கோழி - அரை கிலோ
- சின்ன வெங்காயம் – 15
- சீரகம் – 1 ஸ்பூன்
- மிளகு – 2 ஸ்பூன்
- பச்சை மிளகாய் – 1
- தக்காளி – 2
- இஞ்சிபூண்டு – பேஸ்ட் -2 ஸ்பூன்
- பட்டை, லவங்கம் – தலா 1
- மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
- தனியாத்தூள் – 1 ஸ்பூன்
- மஞ்சள்தூள் – அரை ஸ்பூன்
- கருவேப்பிலை , மல்லி இலை - தேவையான அளவு
- உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை::
- மிளகு , சீரகம் இரண்டையும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
- குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் சேர்த்து தாளித்து, இரண்டாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.
- அதனுடன் பொடித்த மிளகு , சீரகம், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, கோழிக்கறி சேர்த்து நன்கு கலக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 விசில் வரும் வரை வேக விடவும்.