அங்கூர் ஜாமூன்
தேவையான பொருள்கள் ::

  • பால் - 2 லிட்டர்
  • சர்க்கரை - 2 கப்.
  • ஆப்ப சோடா - 1 சிட்டிகை.
  • நெய் - தேவைக்கு.

செய்முறை:

  • கடாயில் சர்க்கரையைப் போட்டு அதனுடன் 4 கப் தண்ணீ ர் சேர்த்து பாகு காய்ச்சிக் கொள்ளவும்.
  • அகலமான பாத்திரத்தில் பாலை ஊற்றி சுண்டக் காய்ச்சி கெட்டியான கோவா பதம் வரும் வரை கிளறி இறக்கி ஆப்ப சோடா சேர்த்து நன்றாகக் கலந்து 10 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
  • பிறகு எடுத்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். இந்த உருண்டைகளை சூடான நெய்யில் போட்டு பொரித்து எடுத்து ரெடியாக வைத்துள்ள பாகில் கலந்து 8 மணி நேரம் கழித்து ஜாமூன்களை மட்டும் தனியாக எடுத்து அல்லது சர்க்கரைப் பாகுடன் சேர்த்து பரிமாறவும்.