பாதாம் பிஸ்தா அல்வா
தேவையான பொருள்கள் ::

  • பேரீச்சம் பழம் - 1 கப்
  • திராட்சை - 1 கப்
  • முந்திரி பருப்பு - 1 கப்
  • பாதாம் பருப்பு - 1 கப்
  • பிஸ்தா பருப்பு - 1 கப்
  • சர்க்கரை - 2 கப்
  • நெய் - 1 கப்
  • தண்ணீ ர் - அரை கப்

செய்முறை:

  • முதலில் சுடுநீரில் பிஸ்தா, பாதாம் பருப்புகளை தோல் நீக்கி ஊற வைத்துக் கொள்ளவும். இதனை வறுத்து அரைத்துக் கொள்ளவும். பின்பு விதை நீக்கிய பேரீச்சம் பழம், திராட்சை இவற்றையும் அரைத்துக் வைத்துக் கொள்ள வேண்டும்.
  • சர்க்கரை தண்ணீ ர் இரண்டையும் வாணலியில் ஊற்றிப் பாகு ஒரு கம்பி பதம் வரும் வரை சூடாக்கவும். அத்தோடு அரைத்த திராட்சை பேரீச்சம் பழக் கலவையைப் போட்டு நன்றாக கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும்.
  • பின், அரைத்த பொடித்து வைத்துள்ள பருப்புக் கலவையைக் கொட்டிக் கிளறவும். இவை யாவும் சேர்ந்து வரும் போது நெய்யைச் சிறிது சிறிதாக விட்டுக் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். அல்வா பதம் ஒட்டாமல் வந்ததும் இறக்கிவிடவும்.