ஜிலேபி
தேவையான பொருள்கள் ::

  • மைதாமாவு – 2 கப்
  • சர்க்கரை – 2 கப்
  • கேசரி கலர், குங்குமப்பூ – சிறிது
  • நெய் – கால் கிலோ

செய்முறை:

  • மைதாமாவை 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கரைத்து 4 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.
  • பிறகு அதில் கேசரி கலர், குங்குமப்பூ கலந்து ஜிலேபி ரிட்டில் ஊற்றிக் கொள்ளவும். ஜிலேபி தவாவில் கால் கிலோ நெய் ஊற்றி, சூடாக்கி ஜிலேபி பிழியவும். ஜிலேபி வெந்ததும் இறக்கி வைக்கவும்.
  • பிறகு சர்க்கரை, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து இரண்டு, மூன்று கம்பிப்பதம் வந்ததும் ஜிலேபியை பாகில் தோய்த்து பரிமாறவும்.