இனிப்பு கொழுக்கட்டை
தேவையான பொருள்கள் ::

  • பச்சரிசி – கால் கிலோ
  • வேர்க்கடலை – 200 கிராம்
  • வெல்லம் – 200 கிராம்
  • ஏலக்காய்த்தூள் – 1 ஸ்பூன்

செய்முறை::

  • பச்சரிசியை ஊறவைத்து உலர்த்தி பின் மாவாக்கிக் கொள்ளவும். வேர்க்கடலையை வறுத்து தோல் நீக்கி பொடித்து அத்துடன் வெல்லத்தைப் பொடி செய்து சேர்க்கவும்.
  • ஏலக்காய்த்தூளை கலந்துக் கொள்ளவும். மாவை ஒரு துணியில் போட்டு அதை இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். ஆறிய பின் சிறிது வெந்நீர் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.
  • பிசைந்த மாவை உருண்டைகள் செய்து வட்டமாக தட்டி வேர்க்கடலை பூரணத்தை வைத்து மூடவும். இவை அனைத்தையும் இட்லித் தட்டில் வைத்து வேகவைத்து எடுக்கவும்.