மில்க் பர்பி
தேவையானவை:

  • காய்ச்சிய பால் – 1 கப்
  • சர்க்கரை – அரை கப்
  • சர்க்கரை இல்லாத கோவா – 250 கிராம்
  • முந்திரிப்பருப்பு – 50 கிராம்
  • பச்சை புட் கலர் – கால் ஸ்பூன்

செய்முறை::

  • பால், சர்க்கரை, கோவா ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு சேர்த்து கலக்கி மிதமான தீயில் வைத்து, கலவை கெட்டியாகும் வரை கிளறவும்.
  • கலவை இறுகி வரும் சமயம் புட் கலரைச் சேர்க்கவும். பிறகு கலவை கெட்டியானவுடன் இறக்கி நெய் தடவிய தட்டில் ஊற்றி சமமாகப் பரப்பி நெய்யில் வறுத்த முந்திரிகளை அலங்கரித்து ஆறியவுடன் டைமண்ட் வடிவத்தில் வில்லைகள் போடவும்.