வாழைக்காய் பருப்பு கூட்டு
தேவையான பொருள்கள்

  • வாழைக்காய் -1
  • பாசி பருப்பு - அரை கப்
  • உப்பு - தேவைகேற்ப்ப

அரைக்க

  • சீரகம் - 1 ஸ்பூன்
  • தேங்காய் துருவல் -கால் கப்
  • அரிசி  - அரை ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் - 4
  • மஞ்சள்தூள்  - கால் ஸ்பூன்
  • தாளிக்க
  • தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்
  • கடுகு - சிறிதளவு
  • கறிவேப்பிலை - கொஞ்சம்

செய்முறை

  • வாழைக்காயை தோல் சீவி சிறிதாக நறுக்கி கொள்ளவும்
  • அரைக்க கொடுத்தவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்
  • பாசி பருப்பை எண்ணெய் ஊற்றாமல் கடாயில் போட்டு வறுத்து  குக்கரில் போட்டு அதனுடன் வாழைக்காயும் சேர்த்து    தேவையான அளவு   தண்ணீர்  ஊற்றி  3 விசில் வரை வேக வைக்கவும்.
  • அதனுடன் அரைத்த மசாலா தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி அதனுடன் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து கொட்டவும்.
  • சுவையான  வாழைக்காய் பருப்பு கூட்டு ரெடி தேவையானால் தக்காளி சேர்த்து கொள்ளலாம்