தேவையான பொருள்கள்
- வாழைக்காய் -1
- பாசி பருப்பு - அரை கப்
- உப்பு - தேவைகேற்ப்ப
அரைக்க
- சீரகம் - 1 ஸ்பூன்
- தேங்காய் துருவல் -கால் கப்
- அரிசி - அரை ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 4
- மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்
- தாளிக்க
- தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்
- கடுகு - சிறிதளவு
- கறிவேப்பிலை - கொஞ்சம்
செய்முறை
- வாழைக்காயை தோல் சீவி சிறிதாக நறுக்கி கொள்ளவும்
- அரைக்க கொடுத்தவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்
- பாசி பருப்பை எண்ணெய் ஊற்றாமல் கடாயில் போட்டு வறுத்து குக்கரில் போட்டு அதனுடன் வாழைக்காயும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 விசில் வரை வேக வைக்கவும்.
- அதனுடன் அரைத்த மசாலா தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி அதனுடன் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து கொட்டவும்.
- சுவையான வாழைக்காய் பருப்பு கூட்டு ரெடி தேவையானால் தக்காளி சேர்த்து கொள்ளலாம்