சில்லி கோபி
தேவையான பொருள்கள்

  • காலிஃப்ளவர் - 1
  • மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
  • மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
  • அரிசி மாவு - 2 ஸ்பூன்
  • கடலை மாவு - அரை கப்
  • மைதா மாவு - அரை கப்
  • இஞ்சி,பூண்டு விழுது - 1  ஸ்பூன்
  • லெமன் ஜுஸ் - 2 ஸ்பூன்
  • டொமேட்டோ சாஸ் - 1 ஸ்பூன்
  • சோயா சாஸ் - 1 ஸ்பூன்
  • உப்பு   -  தேவையான அளவு
  • எண்ணெய்  - பொரிக்க தேவையான அளவு

 
செய்முறை

  • காலிஃப்ளவர் பூக்களை   உதிர்த்து கொதித்த தண்ணீரில் உப்பு   சேர்த்து  10  நிமிடம் மூடி வைக்கவும்.
  • பிறகு தண்ணீரை வடித்து விட்டு பூக்களை தனியே எடுத்து வைக்கவும்.
  • மாவு வகைகள்,  மிளகாய்தூள் , மஞ்சள் தூள், இஞ்சி,பூண்டு விழுது ,டொமேட்டோ சாஸ் ,  சோயா சாஸ் ,  தேவையான அளவு  உப்பு ,  தண்ணீர்   சேர்த்து    தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
  • கடாயில்   எண்ணெய்  ஊற்றி    காலிஃப்ளவரை  ஒவ்வொன்றாக   எடுத்து கரைத்து வைத்த மாவில் ந்ன்கு முக்கி பொரிக்கவும்.  சுவையான சில்லி கோபி  ரெடி