எலுமிச்சை ஊறுகாய்
தேவையான பொருள்கள்:

  • எலுமிச்சை - 10
  • இஞ்சி துண்டுகள் சிறிதளவு
  • பச்சை மிளகாய் -3
  • மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
  • பெருங்காயம் பொடித்தது - 1டீஸ்பூன்
  • வறுத்து அரைத்த வெந்தயப் பொடி -1 டீஸ்பூன்
  • தேவையான உப்பு
  • மிளகாய்ப் பொடி - 5 டீஸ்பூன்
  • நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்


செய்முறை:

  • பழங்களைச் சிறு துண்டங்களாக நறுக்கி உப்பு
  • சேர்த்து விதைகளை நீக்கிவிட்டு ஒரு பாட்டிலில் போடட்டு 2 நாட்கள் ஊற வைக்கவும்.
  • இஞ்சி, பச்சைமிளகாயை சிறிது எண்ணெயில் வதக்கிச் சேர்க்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகை வெடிக்கவிட்டு இறக்கி, மஞ்சள், பெருங்காயப் பொடியைச் சேர்க்கவும்.
  • எண்ணெய் ஆறியவுடன் மிளகாய்ப் பொடியையும் சேர்த்து எலுமிச்சைக் கலவையில் கொட்டிக் கலக்கவும். அடிக்கடி கிளறிவிட்டு காற்றுப் புகாமல் மூடி வைத்து ஒரு வாரம் கழித்து உபயோகிக்கவும்.