தேவையான பொருள்கள்:
- பெரிய மாங்காய்-1
- நல்லெண்ணெய்-கால் கப்
- கடுகு-1 டீஸ்பூன்
- வெந்தயம்-1/4 டீஸ்பூன்
- காரப்பொடி-1 டீஸ்பூன்
- காயம்-1/2 டீஸ்பூன்
- உப்பு-தேவையான அளவு
செய்முறை:
- மாங்காயை சிறு துண்டுகளாக கட் பண்ணி கொள்ளவும்
- வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளிசம் செய்யவும்.
- அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து மாங்காயை தாளிசத்துடன் சேர்த்து உப்பு,காரப்பொடி,காயம் சேர்க்கவும்.
- தனியே ஒரு வாணலியில் வெந்தயத்தைச் சிவக்க வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும்.
- மாங்காய் பச்சை வாடை போக வதக்கவும்.
- பொட்த்த வெந்தயத்தைச் சேர்க்கவும்.
- மாங்காய் நன்கு தொக்கி வரும் வேளையில் தனியே ஒரு வாணலியில் 4 டீஸ்பூன் நல்லெண்ணையைக் கொதிக்க வைத்து மாங்காயுடன் சேர்க்கவும்.
- ஆற விட்டு பாட்டிலுக்கு மாற்றவும்.