கார்ன் பிரெட் டோஸ்ட்
தேவையான பொருள்கள்::

  • மக்காச்சோள முத்துக்கள்  (வேகவைத்தது) - ஒரு கப்
  • பிரெட்  - ஒரு பாக்கெட்
  • பச்சை மிளகாய் - 3
  • சர்க்கரை - 2 ஸ்பூன்
  • கடலைமாவு - 3 ஸ்பூன்
  • நெய் - 2 ஸ்பூன்
  • பால் - 2 கப்
  • உப்பு - - தேவைக்கேற்ப

செய்முறை:

  • ஒரு கடாயில்  நெய்யைக் ஊற்றி காயவைத்து  , அதில் கடலை மாவு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வறுக்க வேண்டும். அடுப்பில் இருந்து மாவை இறக்கி, அதனுடன் சிறிது சிறிதாக பால் சேர்த்து, கட்டி இல்லாதவாறு நன்றாக கலக்கவும்.
  •  மறுபடியும் அடுப்பில் வைத்து, இந்தக் கலவையை பேஸ்ட் ஆகும் வரை கிளறவும். பிறகு, வேக வைத்துள்ள சோளமுத்துக்கள், சர்க்கரை,  பச்சைமிளகாய், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.
  •  பிரெட்டை டோஸ்ட் செய்து, இந்தக் கலவையை பிரெட்டின் மேல் பரப்பிக் கொடுக்க, குழந்தைகள் விரும்பி சாப்பிடு வார்கள்.