பிஸ்கட் கஸாட்டா
தேவையான பொருள்கள்::

  • பிரெட் - 5 ஸ்லைஸ்கள்
  • பிஸ்கட் - 6 மாரி பிஸ்கட்
  • சர்க்கரை பொடித்தது - கால் கப்
  • பழத்துண்டுகள் - ஒரு கப
  • பால் - சிறிதளவு


செய்முறை:

  • மிக்ஸியில் பிரெட்களை ஒரு சுற்றுச் சுற்றி தூளாக்கிக் கொள்ளவும். இதேபோல் மாரி பிஸ்கட்களையும் பொடித்துக் கொள்ளவும்.  ஒரு பாத்திரத்தில் இவற்றை போட்டு, சர்க்கரை தூளையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
  •  பிறகு, சிறிது சிறிதாக பாலை தெளித்து, கரண்டியால் நன்றாக அழுத்தவும். இதை ஃபிரிட்ஜில், சிறு சிறு கிண்ணங்களில்  3 மணி நேரம் வைத்தால், நன்றாக ‘செட்’டாகி விடும். பரிமாறும்போது, இந்த பிஸ்கட்,பிரெட் கலவை மேல் பழத்துண்டு களை வைத்து பரிமாறவேண்டும். ‘ஜில்’லென்று சூப்பர் ருசி தரும் இந்த கஸாட்டா.