பச்சைப் பயறு தோசை
தேவையான பொருள்கள்::

  • முழுப்பயறு (பயறு முழுதாக)- 200 கிராம்
  • பச்சரிசி - தலா 200 கிராம்
  • தேங்காய் துருவல் - ஒரு ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் - 2
  • பெருங்காயத்தூள் - கால் ஸ்பூன்
  • துருவிய இஞ்சி - ஒரு ஸ்பூன்
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
  • எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

  • அரிசி, பயறை ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். இதனுடன் தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் அரைக்கவும். பிறகு, மாவை தோசைக்கல்லில் ஊற்றி, எண்ணெய் விட்டு தோசைகளாக வார்த்து எடுக்கவும்.