ஈஸி மட்டன் சாப்ஸ்
தேவையான பொருள்கள்::

  • மட்டன் - அரைக் கிலோ
  • பச்சைமிளகாய் விழுது -  1 ஸ்பூன்
  • தனியா தூள் -2   ஸ்பூன்
  • மிளகு தூள் - 1  ஸ்பூன்
  • நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்
  • இஞ்சி பூண்டு விழுது - 1  ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
  • நறுக்கிய வெங்காயம்   -  1 கப்
  • உப்பு - தேவைக்கு
  • பட்டை - ஒரு துண்டு
  • சோம்பு  - 1 ஸ்பூன்
  • கரம் மசாலா தூள் -1  ஸ்பூன்
  • கறிவேப்பிலை - 2 கொத்து
  • மல்லி இலை  -  சிறிதளவு
  • உப்பு  -  தேவையான அளவு

செய்முறை::
 
  • மட்டனை நன்கு சுத்தமாக   கழுவி   அதில் மஞ்சள் தூள், உப்பு, மிளகு தூள், தனியாதூள் சேர்த்து பிசைந்து 20 நிமிடம் ஊற வைக்கவும்.
  • குக்கரில் ஊறிய மட்டன் கலவையை போட்டு இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது சேர்த்து பிசைந்து 3  டம்ளர் தண்ணீர் ஊற்றி   உப்பு  சேர்த்து   6 விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும்.
  • கடாயில்   எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு  பட்டை, கறிவேப்பிலை போட்டு தாளி்த்து  நறுக்கிய  வெங்காயத்தை   போட்டு  வதக்கி  அதில் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கி மசாலா வாசனை போனவுடன்
  • தாளித்தவற்றுடன் வேக வைத்த மட்டனை சேர்த்து பிரட்டி விட்டு நன்கு சிவக்க வந்ததும் எடுக்கவும்.  சுவையான  மட்டன் சாப்ஸ் ரெடி.