நெல்லை மட்டன் குழம்பு
தேவையான பொருட்கள்::

  • மட்டன் – அரை கிலோ
  • சின்ன வெங்காயம்  நறுக்கியது – 20
  • தக்காளி  நறுக்கியது – 2
  •  இஞ்சி பூண்டு விழுது – 3 ஸ்பூன்
  • தேங்காய் துருவியது- அரை மூடி
  • கசகசா -  1 ஸ்பூன்
  • சீரகம்  -  1 ஸ்பூன்
  • கரம் மசாலா துாள் - 2 ஸ்பூன்
  • மஞ்சள்  தூள்  - அரை ஸ்பூன்
  • மல்லித்தூள் – 3  ஸ்பூன்
  • மிளகாய் தூள்  - 2 ஸ்பூன்
  • தேங்காய், கசகசா, சிரகம்  சேர்த்து   தண்ணீர் விட்டு  நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

தாளிக்க::

  • பட்டை – சிறிது
  • கிராம்பு – 2
  • சோம்பு  - அரை ஸ்பூன்
  • நல்லெண்ணெய்   -  5 ஸ்பூன்
  • கடுகு  - 1 ஸ்பூன்
  • கருவேப்பிலை மல்லி இலை சிறிதளவு
  • உப்பு - தேவையான அளவு


செய்முறை::

  • மட்டனை கழுவி சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  • குக்கரில்   3 ஸ்பூன்  எண்ணெய் ஊற்றி அதில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து தாளிக்கவும்
  • பின் கழுவி வைத்துள்ள  மட்டனை  சேர்த்து சிறிது உப்பு சேர்த்து   5  நிமிடம் மிதமான தீயில் வைத்து வதக்கி அதனுடன்  இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  •  வதங்கியவுடன் வெங்காயம்,   சேர்த்து  வதக்கிமசாலா துாள்  அனைத்தையும்  சேர்த்து  5  நிமிடங்கள் வதக்கி அதனுடன்  தக்காளியும்  சேர்த்து வதக்கி  தேவையான அளவு  தண்ணீர்  சேர்த்து  மீண்டும்  சிறிதளவு உப்பு  சேர்த்து  குக்கரை   மூடி   5  விசில் விட்டு வேக வைக்கவும்.
  • ஸ்டீம் இறங்கியவுடன்  அரைத்த  தேங்காய் விழுது சேர்த்து மேலும்  10  நிமிடங்கள்  நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.
  • பின்பு 1 கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை ,மல்லி இலை போட்டு தாளித்து குழம்பில் சேர்க்கவும்.
  • சுவையான மணமான  மட்டன் குழம்பு ரெடி
  • தேங்காய்  சேர்த்திருப்பதால் காரம் குறைவாக இருந்தால்  2 ஸ்பூன்  மிளகு தூள்  சேர்த்து கொள்ளவும்.