ஸ்பைசி நண்டு மசாலா
தேவையான பொருள்கள்::

  • நண்டு - 1 கிலோ
  • எண்ணெய் - 1 குழி கரண்டி
  • இஞ்சி பூண்டு - 2 டீஸ்பூன்
  • கரம் மசாலா - அரை ஸ்பூன்
  • வெங்காயம் - 2
  • தக்காளி - 2
  • காய்ங்த   மிளகாய்  - 4
  • மஞ்சள் பொடி - அரை ஸ்பூன்
  • மிளகு - 2 ஸ்பூன்
  • சீரகம் - 1 ஸ்பூன்
  • மல்லி - 2  ஸ்பூன்
  • சோம்பு - அரை ஸ்பூன்
  • தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்
  • முங்திரி பருப்பு   - 4
  • உப்பு - தேவைக்கு
  • கறிவேப்பிலை - மல்லி  - சிறிதளவு

செய்முறை்::

  • முதலில் நண்டை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் வடிகட்டி நண்டு மூழ்கும் அளவு தண்ணீர் வைத்து மஞ்சள் பொடி சேர்த்து   கொதிவந்ததும் தண்ணீரை வடிகட்டிவிடவும்
  • வெங்காயம், தக்காளி, மல்லி இலை கட் செய்து கொள்ளவும்.
  • கடாயில்  எண்ணெய் ஊற்றி   காய்ந்ததும்  கறிவேப்பிலை போடவும். வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு, கரம்மசாலா, தக்காளி, உப்பு சேர்த்து மூடி அடுப்பை   சிம்மில் வைக்கவும்.
  • மிளகு, மல்லி, சீரகம், சோம்பு லேசாக வறுத்துகொள்ளவும். மிக்ஸியில் மிளகு, சீரகம், மல்லி, சோம்பு தூள் செய்து அத்துடன்   தேங்காய், முந்திரி, பச்சை மிளகாய், மல்லி இலை சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.
  • கடாயில்  வெங்காயம், தக்காளி கிரேவி மசிந்து வந்தவுடன் நண்டை சேர்க்கவும். மூடி போட்டு 10 நிமிடம் வேகவிடவும்.  பின்பு தேவையான அளவு   உப்பு  சேர்க்கவும்.
  • பின்பு அத்துடன் அரைத்தமசாலா, தேங்காய் கலவை சேர்த்து 15 நிமிடம் வைத்து மசாலா  வாசனை  போனவுடன்   எண்ணெய்   மேலே மிதந்து  வரும்போதுஇறக்கவும்.
  • சூப்பர்நண்டு மசாலா  ரெடி.