செட்டிநாடு மீன் குழம்பு
தேவையான பொருட்கள்:

  • மத்தி  மீன் - அரை கிலோ
  • சின்ன வெங்காயம் – 15
  • நாட்டுத் தக்காளி - 2
  • தனியாத் தூள் – 2 ஸ்பூன்
  • மிளகாய்த் தூள் – 3 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் –  கால்  டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – 1 கொத்து
  • பூண்டு – 12 பல் உரித்தது
  • புளி –  நெல்லிக்காய்  அளவு
  •  கொத்தமல்லி, கறிவேப்பிலை – தேவையான அளவு

செய்முறை:

  • மீனை மத்தி சுத்தம் செய்து வைக்கவும்.
  • சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி பொடியாக நறுக்கி வைக்கவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், சீரகம் தாளித்து கறிவேப்பிலை நறுக்கிய பொருள்களை போட்டு நன்றாக
  • வதக்கி, புளியை கரைத்து ஊற்றி தனியாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள்தூள் போட்டு கலந்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
  •  குழம்பில்  எண்ணெய் மிதக்கும் பொழுது மீன்,  போட்டு 4 கொதி வந்த பிறகு இறக்கி கொத்தமல்லி தூவி  மூடிவிடவும். .