மதுரை அயிரை மீன் குழம்பு
தேவையான பொருட்கள்::

  • அயிரை மீன் –  கால் கிலோ
  • சின்ன  வெங்காயம் 150 கிராம்
  • தக்காளி – 2
  • பூண்டு- 10 பல்
  • பச்சை மிளகாய் -3
  • கருவேப்பிலை,கொத்தமல்லி இலை –  சிறிதளவு
  • நல்லெ  எண்ணெய்- ‍4 ஸ்பூன்
  • கடுகு,- தாளிக்க
  • மஞ்சள் தூள்  - கால் ஸ்பூன்
  • மிளகாய்த்தூள்‍1 ஸ்பூன்
  • மல்லி  தூள்- ‍  2 ஸ்பூன்
  • உப்பு – தேவைக்கு.
  • புளி- சிறிய எலுமிச்சை அளவு
  • அரைத்த  தேங்காய் - 5 ஸ்பூன்

செய்முறை::

  • அயிரை மீனை கல் உப்பு போட்டு  நன்றாக மூன்று நான்கு முறை தண்ணீர் விட்டு கழுவ வேண்டும்.  
  • அயிரை  மீனில்   மண்  அதிகம்   இருக்கும்   அதனால் மண் போக   நன்கு கழுவ வேண்டும்.
  • பின்புஒரு   கடா யில் எண்ணெய் விட்டு, கடுகு,  , கருவேப்பிலை, பூண்டு, வெங்காயம் தாளித்து, வதங்கியவுடன், தக்காளி,சேர்க்க வேண்டும்.
  • தக்காளி மசிந்தவுடன், மிளகாய்த்தூள், மசாலாத்தூள் சேர்க்க வேண்டும். புளித்தண்ணீர் விட வேண்டும்.  
  •  அதனுடன் அரைத்த தேங்காய்   தேவையான அளவு   உ்புசேர்த்து   நன்கு   கொதிக்க  வைத்து   குழம்பு   ஒரளவுக்குகெட்டியானவுடன்  மீனை போட வேண்டும்,
  • பின்பு  5 நிமிடம் கழித்து  குழம்பை இறக்கி வைத்து அதில்சிறிதளவு   கருவேப்பிலை,கொத்தமல்லி இலை போட்டு  மூடி வைக்கவும். சுவையான அயிரை மீன் குழம்பு ரெடி