காரைக்குடி மீன் குழம்பு
தேவைாயன பொருள்கள்::

  • மீன்-   அரை கிலோ
  • தேங்காய்  - அரை மூடி
  • மிளகு-  1  ஸ்பூன்
  • சீரகம்-1ஸ்பூன்
  • புளி-எலுமிச்சை பழ அளவு
  • இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
  • மிளகாய்த்தூள்-2  ஸ்பூன்
  • தனியாத்தூள்- 3  ஸ்பூன்
  • மஞ்சள் தூள்-  கால் ஸ்பூன்
  • நறுக்கிய  வெங்காயம்  - 2
  • தக்காளி நறுக்கியது  - 3
  • பூண்டு  -  10 பல்
  • மல்லி  இலை -  சிறிதளவு
  • நல்லெண்ணெய்-1குழிக்கரண்டி அளவு
  • கடுகு-  1 ஸ்பூன்
  • வெந்தயம்-  1  ஸ்பூன்
  • பச்சை மிளகாய்-4
  • உப்பு- தேவையான அளவு
  • கறிவேப்பிலை-தேவையான அளவு

செய்முறை::

  • மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
  • புளியை  தண்ணீரில் கரைத்து  வைத்து கொள்ளவும்.
  • தேங்காய், மிளகு, சீரகம், சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக   அரைத்துக் கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய்   ஊற்றி  சிறிதளவு  சீரகம், மிளகு, வெந்தயம், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • பின் பூண்டு, வெங்காயம்,  இஞ்சி பூண்டு விழுது,சேர்த்து  2  நிமிடங்கள் வதக்கவும்.
  • அதனுடன்  பச்சை மிளகாய்  , தக்காளி சேர்த்து நன்கு  வதக்கவும். பின் புளித்தண்ணீர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  • நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன், அரைத்து வைத்துள்ள  தேங்காய்  விழுது   தேவைாயான அளவு தண்ணீர்சேர்த்து   நன்கு கொதிக்க விடவும்.
  • குழம்பு  ஒரளவு கெட்டியானவுடன் மீன்  சேர்த்து 10 நிமிடம்  கொதிக்க விட்டு   மல்லி இலை கறிவேப்பிலை  போட்டு  இறக்கவும்
  • சுவையான காரைக்குடி மீன்குழம்பு ரெடி.